புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (12:17 IST)

சமரசமற்ற அஹிம்சை போரை தொடங்கியுள்ளோம்: நீட் குறித்து முதல்வர் ஸ்டாலின்!

நீட் விலக்கு மசோதா குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக சமரசமற்ற அகிம்சைப் போரைத் தொடங்கி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 
 
நாளை நீட் விலக்கு மசோதா சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது என்று தெரிவித்த முதலமைச்சர், கடைக்கோடி தமிழ் மாணவர்களுக்கும் எட்டாக்கனியாக உள்ள மருத்துவ கல்வி வாய்ப்பு கிட்ட வேண்டும் என்பதுதான் இந்த மசோதாவின் நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்
 
நீட் தேர்வை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்தார் என்றாலும் ஆனால் அந்த எதிர்ப்பு தொடரவில்லை என்று கூறிய முதல்வர், தமிழக மக்களுக்கு எதிரான எந்த திட்டங்களையும் திமுக ஏற்றுக்கொள்ளாது என்றும் தெரிவித்தார் 
 
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நீட் தேர்வை முதலில் எதிர்த்தார் என்றாலும் அடுத்ததாக வந்த முதல்வர் நீட்தேர்வு ஏற்றுக் கொண்டதாக கூறினார். நீட் தேர்வு தொடர்பாக அரசியல் செய்ய வேண்டியது திமுகவுக்கு தேவை இல்லை என்றும் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு எதிராக எந்த திட்டமாக இருந்தாலும் திமுக அரசு அதை எதிர்க்கும் என்றும் தெரிவித்தார்.