1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 5 பிப்ரவரி 2022 (23:40 IST)

முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது !

சென்னையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  இதுதொடர்பாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குப் பேசிய மர்ம நபர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள  முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து  போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  செங்கல்பட்டு மாவட்டம் வடபுறந்த வாக்கம் பகுதியைச்   சேர்ந்த ஐயப்பன் என்பவை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மது போதையில்  வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியாகிறது.