வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (13:52 IST)

பாஜகவுக்கு ஆதரவு வாபஸ்: சுயேட்சை எம்.எல்.ஏக்கள் போர்க்கொடியால் புதுவையில் பரபரப்பு

பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக மூன்று சுயேச்சை எம் எல் ஏக்கள் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளதால் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
புதுவையில் தற்போது ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு 3 பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வாரிய தலைவர் பதவி உள்பட எந்த விவகாரத்திலும் எங்களை கண்டு கொள்வதில்லை என பாஜக மீது குற்றம்சாட்டிய 3 சுயேச்சை எம் எல் ஏக்கள் திடீரென பாஜகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக சபாநாயகரை சந்தித்து தெரிவித்துள்ளனர். இதனால் புதுவையில் ஆட்சி கவிழுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது