1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (08:36 IST)

மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை என்பது எனது ஐடியா: கமல்ஹாசன்

மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 வழங்க வேண்டும் என்பது என்னுடைய ஐடியா என்றும், ஆனாலும் அதை திமுக அரசியல் செயல்படுத்துவதில் எனக்கு மகிழ்ச்சி தான் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 என்பது என்னுடைய ஐடியா என்றும் எங்களுடைய தேர்தல் அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் இருப்பினும் இந்த ஐடியாவை செயல்படுத்திய தமிழக அரசுக்கு எனது பாராட்டுக்கள் என்றும் என்னுடைய ஐடியாவை செயல்படுத்தியதால் நான் பொறாமைப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
 
 பணம் என்பது வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்றும் சோறு தண்ணீர் கிடைக்க வேண்டுமென்றால் பணம் தேவை என்றும் எனவே மகளிர்க்கு பணம் கொடுப்பது முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார் 
 
 
Edited by Siva