1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai Nellai vandhe bharath train ticket fulled one week

சென்னை - நெல்லை வந்தே பாரத்.. அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை ஹவுஸ்புல்..!

சென்னை
சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில், இன்று பாரத பிரதமரால் துவக்கி வைக்கப்பட்ட நிலையில் இந்த ரயிலுக்கு அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை டிக்கெட் இல்லை என்றும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
நாளை திங்கள் முதல் அடுத்த திங்கள் வரை முழு அளவிலான டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டதாகவும் தற்போது வெயிட்டிங் லிஸ்ட்கள் மட்டுமே இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் புதன்கிழமைகளில் இருந்து தான் டிக்கெட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
செவ்வாய்க்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் வந்தே பாரத் ரயில்  இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் அதிரடியாக ஒரு வாரத்துக்கு முதல் நாளே புக் ஆகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த ரயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ஐந்து ரயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும் என்பதும் சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் இரவு 10.40க்கு நெல்லை சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பாஜக போடு தோப்புக்கரணம்னு சொன்னா, போடுபவர்கள் தான் அதிமுகவினர்: முதல்வர் ஸ்டாலின்