தொடர்புடைய செய்திகள்
- 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?
- அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உலக முதலீட்டாளர்களை சந்திக்க என தகவல்..!
- ஓசூரில் சர்வதேச விமான நிலையம்: சட்ட பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
- சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!
- நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு..! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.!!
திராவிட மாடல் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை.. 2026 தேர்தலில் வெற்றி எங்களுக்கே: முதல்வர் ஸ்டாலின்..!
திராவிட மாடல் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அதனால் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் நாங்களே வெற்றி பெறுவோம் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் செய்த உண்மைக்கு மாறான பிரச்சாரங்களை மக்கள் முறியடித்து செய்கூலி சேதாரம் இல்லாமல் முழுமையான வெற்றியை எங்களுக்கு கொடுத்து இருக்கின்றனர்.
மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளும் ஈடு இணையற்ற திட்டங்களை தந்து 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் நாங்கள் மகத்தான வெற்றியை பெறுவோம்.
இதை மமதையோடு சொல்லவில்லை, என் மீதும் திராவிட மாடல் அரசு மீதும் வைத்துள்ள நம்பிக்கையை வைத்து துணிச்சலுடன் சொல்கிறேன் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.
Edited by Mahendran
