வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 9 மே 2022 (16:49 IST)

நரேஷ்குமாரை தாக்கியதால் ஜெயகுமார் கைது செய்யப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

jayakumar
கள்ள ஓட்டு போட்ட நரேஷ் குமார் என்பவரை தாக்கியதால் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நரேஷ் குமாரை தாக்கியதால் ஜெயக்குமார் கைது செய்யவில்லை என்று கூறியிருக்கிறார் 
 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதானது குறித்து விளக்கமளித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொது மக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட தாகவும் நில அபகரிப்பு வழக்கு தொடர்பாகவும் தான் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார் என்றும் நரேஷ்குமார் தாக்கியதால் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முன்னதாக மூன்று வழக்குகளில் ஜெயகுமார் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த மூன்று வழக்குகளிலும் ஜாமின் ஜெயகுமார் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.