வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 9 மே 2022 (16:38 IST)

ஆணுறையில் துளைகள் போட்டு காதலனை ஏமாற்றிய பெண்… இப்போது சிறையில்- நடந்தது என்ன?

ஜெர்மனியில் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனது காதலனின் ஆணுறையில் ஓட்டைகளைப் போட்டுள்ளார் அந்த பெண்.

ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் வசித்து வரும் அந்த காதலர்கள் இருவரும், சில ஆண்டுகளாக லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் உறவின் அடுத்த கட்டத்துக்கு செல்லவும், காதலனையே மணந்துகொள்ளவும் விரும்பியுள்ளார். ஆனால் அந்த நபர் அதை விரும்பவில்லை. இதனால் அந்த பெண் காதலனுக்கு தெரியாமல் அவர் பயன்படுத்தும் ஆணுறைகளில் ஓட்டைகளை போட்டு வைத்துள்ளார். இதன் மூலம் தான் கருவுறுவோம் என்ற நம்பிக்கையில்.

இதையடுத்து அந்த பெண் காதலனுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக அனுப்பிய செய்தியில் தான் கருவுற்று இருப்பதாகவும், ஆணுறைகளில் ஓட்டை போட்ட விஷயத்தையும் சொல்லியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியான அந்த காதலன் தன்னை ஏமாற்றிவிட்டதாக காதலி மேல் வழக்குத் தொடுத்துள்ளார்.  நீதிமன்ற விசாரணையில் அவர் இந்த குற்றங்களை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு நீதிமன்றம் இப்போது 6 மாத காலம் சிறை தண்டனை விதித்துள்ளது.