ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தேமுதிக தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்தது ஏன்? கைதான நபர் வாக்குமூலம்

dmdk fire
தேமுதிக தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்தது ஏன்? கைதான நபர் வாக்குமூலம்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தேமுதிக தண்ணீர் பந்தலுக்கு தீ வைக்கப்பட்டது என்பதும் தேமுதிக அலுவலகம் முன் இருந்த விஜயகாந்த் பேனர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாகவும் கூறப்பட்டது .
 
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை செய்தனர். இதனை அடுத்து தேமுதிக தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்ததாக ராமு என்பவர் கைது செய்யப்பட்டார். 
 
அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்ற போது சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு சென்று தண்ணீர் குடிக்க சென்றதாகவும் ஆனால் அங்கு பானையே இல்லை என்றும் பானையே இல்லாமல் ஒரு தண்ணீர் பந்தல் ஏன் என்பதற்காக தான் தீ வைத்தேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.