ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 8 மே 2022 (10:19 IST)

பட்டினப்பிரவேசம் நடத்த முதல்வர் அனுமதி: தருமபுரி ஆதினம் தகவல்

dharumapuram
பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த உள்ளூர் நிர்வாகம் தடை விதித்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக தருமபுர ஆதினம் பேட்டியளித்துள்ளார் 
 
பட்டின பிரவேசத்தை நடத்த முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தருமபுர ஆதினம் பேட்டி அளித்துள்ளார். குத்தாலம் கோவிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய தருமபுரி ஆதினம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தருமபுரி ஆதீன பட்டினபிரவேச நிகழ்ச்சியை நடத்த வாய்மொழியாக அனுமதி அளித்துள்ளதாகவும் அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தருமபுரி ஆதின தரப்பினர் தெரிவித்துள்ளனர் 
 
தருமபுரி ஆதின பட்டினபிரவேச நிகழ்ச்சியை நடத்த விடமாட்டோம் என திமுகவினர் ஒருபக்கம் கூறி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் அனுமதி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது