1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Stalin and OPS wishes one to another

மாறி மாறி வாழ்த்து தெரிவித்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் - ஓபிஎஸ்!

CM Stalin and OP
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று பல அரசியல்வாதிகள் வாழ்த்து தெரிவித்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் முக ஸ்டாலின் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்தார் 
 
இந்த நிலையில் நேற்று ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அதே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் விரைவில் முழுமையாக நலம் பெற வாழ்த்துகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 
 
முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் மாறி மாறி வாழ்த்து தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு ! வானிலை மையம்