வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (15:26 IST)

சினிமா கலைஞர் மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை : பகீர் சம்பவம்

திண்டுக்கல் மாவட்டம் நேருஜி நகரில் திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் இருக்கிறது. நேற்று காலை வேளையில் இங்குள்ள மேம்பாலக் கம்பியில் ஒருவர் தூக்குப்போட்ட நிலையில் சடலமாகத் தொங்கிக்கொண்டிருந்தார். இதுகுறித்து அங்குள்ளவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் திண்டுக்கல் மாவட்ட வடக்கு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.அங்கு பேண்ட் மட்டுமே அணிந்து, மேம்பாலக் கம்பியில்  தன் சட்டையில் தூக்குப் போட்டிருந்த சடலத்தை, கயிறு கட்டி மீட்டனர்.
 
இந்நிலையில் போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை மெற்கொண்டார். அதில் அந்த வாலிபரின் பேண்ட் பாக்கெட்டை சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு செல்போன் ஏற்கனவே பேசியிருந்த எண்களுக்குத் தொடர்பு கொண்டு போலீஸார் விவரம் கேட்டனர்.
 
அப்போது, அவர், தேனி மாவட்டம் போடி ரங்கநாதபுரம் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (48)என்று தெரிந்தது.
 
மேலும், விசாரணையில் கணேசனின் மகன் விஜய்க்கு  சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. அதற்க்காகத்தன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்பொழுது ஏற்பட்ட மனவுளைச்சலில் திண்டுக்கல்லில் உள்ள மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலைசெய்துள்ளதாக போலீஸார் கருதுகின்றனர். இதுகுறித்து தீவிரமாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.