வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2019 (15:01 IST)

பாலிவுட்டில் ரேமேக்காகும் அமலா பாலின் ஹிட் திரைப்படம் !

சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, அமலா பால், பாபி சிம்ஹா நடித்து கடந்த 2017ம் ஆண்டு வெளிவந்து வெற்றிநடைபோட்ட படம் ‘திருட்டுப்பயலே 2’. இப்படத்தில் சனம் ஷெட்டி, விவேக், ரோபோ சங்கர் முக்கிய வேடங்களில் நடிக்க வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.  போலீஸ் திரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 
 
தமிழில் இரண்டு பாகங்களாக வெளிவந்து வெற்றிநடைபோட்ட இப்படடம் தற்போது பாலிவுட் சினிமாவில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் சுசி கணேசனே இயக்குவார் என்று தெரிகிறது.இதற்கு முன்பும்  சுசி கணேசன் திருட்டு பயலே படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளார். 


 
எனவே விலையில் இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடக்கவுள்ள நடிகர்,  நடிகைகள் யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.