வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2019 (11:34 IST)

"தளபதி 63" அப்டேட் குறித்து ட்விட் செய்த தயாரிப்பாளர்! கடுப்பான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.
 


 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு உள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது நடைபெற்று வருகிறது. 
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்றும், மேலும், இந்த படம் பெண்கள் கால்பந்து போட்டியை பற்றிய கதையாக இருக்கும் என ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின. தற்போது படப்பிடிப்பு வேகமெடுத்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் விஜய் ரசிகர்கள் அவ்வப்போது அப்டேட் கேட்டு வருகின்றனர். ஆனால், அப்டேட் வெளியாகவில்லை. படக்குழு ஏதேனும் ஒரு அப்டேட் வெளியிட்டாலும் அது ஏற்கனவே ரசிகர்களுக்கு தெரிந்த ஒரு விடைமயமாகவே இருந்து வருகிறது. 
 
இதனால் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியிடம் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து அன்புத்தொல்லை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் அப்டேட் குறித்து ட்விட் செய்துள்ள தயரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி. 
 
"உங்களை போல நானும் தயாரிப்பாளரிடம் அப்டேட் கேட்டுகொண்டே இருக்கும் ஒரு சாதாரண நபர் தான் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். தளபதி 63 யின் அப்டேட் குறித்து நேரத்தில் வெளியாகும். உங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நாங்கள் நேரம் பார்க்காமல் உழைத்துக்கொண்டிருக்கிறோம் ‘ என்று ட்வீட் செய்துள்ளார். இதனை கண்ட விஜய் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். ஒரு சிலரோ அவர்கள் சொல்வதும் நியாயம் தானே என தயாரிப்பாளருக்கு சாதகமாக பேசி வருகின்றனர்.