ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (13:45 IST)

சென்னை வந்தார் சீன அதிபர்..

பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி சற்று முன்னர் சென்னை வந்து இறங்கிய நிலையில் தற்போது சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை வந்துள்ளார்.

பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் இன்று மற்றும் நாளை, இரு நாட்கள் இரு நாட்டு உறவுகள், பொருளாதாரம் குறித்து சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.  இதை தொடர்ந்து சற்று முன்னர் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்திற்கு நரேந்திர மோடி சென்னைக்கு வந்த நிலையில், தற்போது சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரை வரவேற்பதற்கு மேளவாத்தியங்கள், கலை நடனங்கள் ஆகியவை ஏற்பாடு செயப்பட்டுள்ளது. மேலும் இன்று மாமல்லபுரத்தை சுற்றி பார்க்கும் சீன அதிபர், மாலை கோவளத்தில் மோடியை சந்திக்கிறார் எனவும் கூறப்படுகிறது.