திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 11 அக்டோபர் 2019 (09:30 IST)

அன்றும், இன்றும், என்றும் #GoBackModi: டிவிட்டரில் டாப் டிரெண்டிங்!!

இன்று பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில் வழக்கம் போல #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 
 
பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான சந்திப்பு இன்று (அக்டோபர் 11) மற்றும் நாளை (அக்டோபர் 12) நடைபெறும். இந்த சந்திப்பிற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று மதியம் சென்னை வந்தடைகிறார். 
 
இந்திய பிரதமர் - சீன அதிபர் இடையேயான சந்திப்பில் எல்லை பிரச்சனை விவகாரங்களில் இருநாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். 
இந்த சந்திப்பை தமிழக அரசியல் தலைவர்களான ஸ்டாலின், வைகோ ஆகியோர் எதிர்க்காமல் ஏற்றுக்கொண்ட நிலையிலும் இன்று வழக்கம் போல் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 
 
#GoBackModi டிவிட்டர் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ள நிலையில் இதனோடு #TNWelcomesModi, #TN_welcomes_XiJinping ஆகிய ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகி வருகிறது.