டெங்கு நகரமாக மாறிவரும் சென்னை! – 543 பேர் மருத்துவமனையில் அனுமதி!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் டெங்கு காய்ச்சலால் 500 பேருக்கும் மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக தமிழக மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழலில் சென்னையில்தான் அதிகமாக டெங்குவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை முதற்கொண்டு சிறிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை 543 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு உடனடியாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் டெங்கு பரவாமல் இருக்க சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள அரசு அதிகாரிகள் மக்களை அறிவுறுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. டெங்குவை தடுக்க சரியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.