சீன அதிபருக்கு எதிராக ஐடிசி முன்பு கோஷம்: திபேத்தியர்கள் கைது!

itc
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 11 அக்டோபர் 2019 (12:34 IST)
சீன அதிபருக்கு எதிராக சென்னை ஐடிசி ஓட்டல் முன்பு கோஷமிட்ட திபேத்தியர்கள் கைது செய்யப்படுள்ளனர்.

சீன அதிபர் சின்பிங் மற்றும் இந்திய பிரதமர் மோடி இன்று மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். இந்நிலையில் அதிபர் தங்க இருக்கும் ஐடிசி ஓட்டல் முதல் மாமல்லபுரம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சீன அதிபருக்கு எதிராக திபேத்தியர்கள் சிலர் போராட்டம் நடத்த இருப்பதாக கிடைத்த தகவலால் பல இடங்களில் திபேத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் சீன அதிபர் சென்னை வர உள்ளார். இந்நிலையில் பலத்த காவல்களையும் மீறி கிண்டி ஐடிசி ஓட்டல் வந்த திபேத்தியர்கள் ஐந்து பேர் சீன அதிபருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்திருக்கின்றனர்.

இதனால் ஐடிசி ஓட்டல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.இதில் மேலும் படிக்கவும் :