வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (12:03 IST)

தமிழில் டிவிட் செய்த பிரதமர் மோடி.

இன்று மற்றும் நாளை என இரு நாட்கள், சீன அதிபரை சந்திக்கவுள்ள பிரதமர் மோடி, சென்னை வந்துள்ள நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.

இன்று மற்றும் நாளை என இரு நாட்கள், சீன அதிபரை சந்திக்கவுள்ள பிரதம் மோடி, தற்போது சென்னைக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், ஆளுநர் பன்வரிலால் புரோகித் ஆகியோர் வரவேற்றனர்.

பின்பு ஹெலிகாப்டர் மூலம் கோவளம் வந்தடைந்த மோடி, அங்குள்ள தாஜ் ஃபிஷர்மேன் கோவ் விடுதியில் தங்கவுள்ளார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், “சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா-சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின்  மூலம் மேலும் வலுபெறட்டும்” தமிழிலேயே தனது மகிழ்ச்சிகளை தெரிவித்துள்ளார். மேலும் கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் கூறியுள்ளார்.