1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified சனி, 29 பிப்ரவரி 2020 (13:13 IST)

ஏடிஎம்-ல் வெளிவந்த சில்ட்ரன் பேங்க் 2000 நோட்டு.. அதிர்ச்சியில் உறைந்த நபர்

மதுரையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ டி எம்-ல் குழந்தைகள் விளையாடும் ரூ.2000 நோட்டு வெளிவந்ததாக புகார் எழுந்துள்ளது.

மதுரை பசுமலையில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல் இன்று காலை ராஜசேகர் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம்-ல் இருந்து சிறுவர்கள் விளையாடும் சில்ட்ரன் பேங்க் ஆஃப் இந்தியா என்று அச்சிடப்பட்ட 2000 ரூபாய் வெளிவந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ராஜசேகர் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார். இச்செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.