வியாழன், 20 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 மார்ச் 2025 (13:15 IST)

அதிகரிக்கும் கொலை சம்பவம்! ரவுடிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு! - உஷார் நிலையில் காவல்துறை!

Police Arrest

தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக படுகொலை சம்பவங்கள், குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக தொடர்ந்து வரும் படுகொலை சம்பவங்கள், ரவுடிகள் மோதல், கொலை உள்ளிட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

 

சமீபத்தில் நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகீர் உசேன் நிலத்தகராறு தொடர்பான பிரச்சினையில் படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து நேற்று சென்னை அயனாவரம் திமுக தொழிற்சங்க நிர்வாகி கும்புசாமியின் உதவியாளர் குமார் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். ஈரோட்டில் பட்டப்பகலில் சாலையில் வைத்து ரவுடி ஒருவர் வேறு சில ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

 

இந்நிலையில் தமிழ்கம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்ற செயல்களை கட்டுப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். 

 

நிலப்பிரச்சினைகள், கொலை மிரட்டல் தொடர்பாக காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது பாரபட்சம் இன்றி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அரிவுறுத்தப்பட்டுள்ளது. புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை சிறையில் அடைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தமிழகம் முழுவதும் தலைமறைவாக உள்ள ரவுடிகள் பட்டியலை தயார் செய்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை உதவி கமிஷனர்கள், டிஎஸ்பி, இண்ஸ்பெக்டர் அனைவரும் எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

மேலும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்குமாறும், ரவுடிகளுக்கு இடையேயான மோதல் சம்பவங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், அவர்களை கண்காணிப்பில் வைக்கவும் உத்தரவுகள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K