செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 9 செப்டம்பர் 2021 (23:58 IST)

புதிய ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநராக நாகலாந்து அளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அறிவிப்பை இன்று  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழக ஆளுநராக என்.ஆர்.ரவி நியமிக்கப்பட்டுள்ளதற்கு  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,  தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்!தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்!

தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது! எனத் தெரிவித்துள்ளார்