நாளை கரூர் செல்லும் முதல்வர்!.. மீட்டிங்கில் என்ன பேசப்போகிறார் விஜய்?..
தமிழக முதல்வர் விஜய் நாளை கரூருக்கு சென்று அங்கே பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்வதோடு அவர்களின் குடும்பத்தினர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமனத்தையும் வழங்கவிருக்கிறார். 32 பேர் அரசு பணிகளை பெறவிருக்கிறார்கள்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக கரூர் சென்றார். அப்போது கூட்டம் நிறைய கூடிவிட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஆனால் பாதுகாப்பு கருதி அவர்களை விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை. அதேநேரம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் சொன்னதோடு அவர்களுக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில்தன், நாளை கரூர் செல்கிறார் விஜய்..
அங்கு 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அங்கே கரூர் மக்கள் முன்பு முதலமைச்சர் விஜய் பேசவிருக்கிறார்.. கண்டிப்பாக கரூர் சம்பவத்தில் என் மீது தவறில்லை.. இது அரசியல் சதி.. தப்பு செய்வர்களை விடமாட்டோம்.. உங்களுக்கு நான் வாக்கு கொடுக்கிறேன் என்கிற ரீதியில்தான் விஜய் பேசுவார்.
அவர் மட்டுமல்ல ஆதவ் அர்ஜுனாவும் அப்படி பேசவே வாய்ப்பு அதிகம். அதனால்தான் பொதுவெளியில் கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா, சிடி நிர்மல் குமார், என். ஆனந்த், முதலமைச்சர் விஜய் ஆகியோர் பேசக்கூடாது என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும் நிலையில் திமுக தரப்பு மனுவை வாபஸ் பெற்றது.
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்துவரும் நிலையில் கரூரில் நாளை முதல்வர் விஜயும், தவெக அமைச்சர்களும் என்ன பேசப்போகிறார்கள் எகிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.