தொடர்புடைய செய்திகள்
- 41 பேர் குடும்பத்திற்கு அரசு வேலை கொடுக்க கூடாது: நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தில் முறையீடு..
- ரூ.23 லட்சம் மோசடி: முன்னாள் அமைச்சர் உதவியாளர் எனகூறிய நபரின் வீட்டிற்கு சீல்! DVAC அதிரடி
- மதம் மாறியவர்களுக்கு அரசு சலுகை கிடையாது: மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!
- எங்களுக்கு அரசு வேலை கொடுத்தால் லஞ்சம் வாங்காமல் வேலை செய்வோம்.. முதலமைச்சருக்கு இளைஞர் வைத்த கோரிக்கை
- நடுக்கடலில் கப்பலில் மரணம் அடைந்த தூத்துகுடி மாலுமி.. மனைவிக்கு அரசு வேலை கொடுத்த தவெக அரசு..
கரூர் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க தடை கோரி மீண்டும் மனு..
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் முடிவை நடைமுறைப்படுத்த தடை விதிக்கக் கோரி, மதுரையை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல இருக்கும் நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று இன்றே விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்த முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடியாக மறுப்பு தெரிவித்துவிட்டது.
மேலும், இது தொடர்பான விவகாரம் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும்போது, இதனை இங்கு அவசரமாக விசாரணை செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். விதிகளுக்குப் புறம்பாக அரசுப் பணி வழங்கப்படுகிறது என்று கருதினால், அதற்குரிய சட்டப்பூர்வ ஆதாரங்களுடன் தனியாகப் புதிய மனுவாகத் தாக்கல் செய்யலாமே தவிர, அவசர வழக்காகக் கருத முடியாது என்று கூறி நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
