வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 14 மே 2021 (15:29 IST)

ஒருமாத ஊதியத்தை அளித்த காவலாளியை நேரில் அழைத்து நன்றி கூறிய முதல்வர்!

ஒருமாத ஊதியத்தை அளித்த காவலாளியை நேரில் அழைத்து நன்றி கூறிய முதல்வர்!
தமிழக அரசு கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் கொரோனா நிதியாக கோடிக்கணக்கில் இலட்சக்கணக்கிலும் பலர் கொடுத்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் ஏழ்மை நிலையில் உள்ள காவலாளி ஒருவர் தனது ஒரு மாத சம்பளத்தை கொரோனா நிதிக்காக வழங்கியதை அடுத்து நெகிழ்ந்து போன முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அவரை நேரில் அழைத்து பாராட்டிய தோடு நன்றி கூறியுள்ளார்
 
தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தனியார் நிறுவன காவலாளி தங்கதுரை என்பவர் வழங்கினார். இந்த தகவல் குறித்து கேள்விப்பட்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அவரை நேரில் வரவழைத்து நன்றி கூறியதோடு திருக்குறள் புத்தகம் ஒன்றையும் அவருக்கு அன்பு பரிசாக அளித்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது