வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (13:01 IST)

தனியார் மருத்துவமனைகள் மனித நேயமற்று நடந்துகொள்ளக் கூடாது… அமைச்சர் கோபம்!

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் பேரிடர் காலத்திலும் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தோடு செயல்படக் கூடாது என அமைச்சர் மா சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார்.

சட்டசபைக் கட்சித்தலைவர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யம், ’ கடைசி நேரத்தில் கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவ மனைகள் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்புவது, மனிதாபி மானமற்ற செயல். இந்த பேரிடர் காலத்திலும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு செயல்பட கூடாது’ எனக் கூறியுள்ளது.