வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (13:19 IST)

திட்டுனாலும் என்ன பார்த்த உடனே ஒரு செல்பி கேக்குறாங்க… கம்பேக் கொடுக்கும் ஜூலி!

பிக்பாஸ் பிரபலம் ஜூலி இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பமாகவுள்ள ஒரு புதிய நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொள்ள உள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ‘யார்றா இந்த பொன்னு?’ என ஜூலியைப் பார்த்தவர்கள் அதன் பின் பிக்பாஸில் கலந்துகொண்ட போது ‘என்னடா இந்த பொன்னு?’ என ஷாக்காகினர். அந்த அளவு கெட்ட பெயரோடு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜூலி. அதன் பின் சில திரைப்படங்களில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எதுவும் ரிலிஸாகவில்லை. சில படங்களில் துக்கடா கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் மட்டுமே இப்போது வரைக் கிடைத்துள்ளது. இந்நிலையில் நீண்ட காலமாக சமூகவலைதளங்களில் காணாமல் போன ஜூலி இன்று திடீரென கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவர் புகைப்படங்கள் பகிரும்போதெல்லாம் மோசமாக கமெண்ட் செய்துவந்தனர் ரசிகர்கள்.

இப்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 4 சீசன்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் நடன நிகழ்ச்சியில் அவரும் ஒரு போட்டியாளராக கலந்துகொள்கிறார். இந்நிலையில் ஒரு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ‘என்னதான் மக்கள் என்னை எப்போதும் திட்டினாலும் பார்த்தவுடனே செல்பி கேட்டு பாசமுடன் வந்து எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு பிடிக்கிறதோ, இல்லையோ என்னை பார்த்தாலே செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள்.  என் முகத்துக்கு நேராக என்னை திட்டும் தைரியம் யாருக்கும் இல்லை. எல்லோருக்கும் ஹேட்டர்ஸ் இருக்கிறார்கள். உங்களிடம் வெற்றி வந்தால் அதன் பிறகு எல்லாம் சரியாகிவிடும். கொரோனா முடிந்த பின்னர் நான் நடிக்கும் படங்கள் எல்லாம் வெளிவரும்’ எனக் கூறியுள்ளார்.