வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (13:24 IST)

கோவாக்சின் பார்முலாவை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறது… மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் உருவாக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. ஆனால் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் உடனடியாக தடுப்பூசியை அனைவருக்கும் கொடுப்பது இயலாத காரியமாக உள்ளது.

இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் தங்கள் பார்முலாவை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி தயாரிக்க விரும்பும் நிறுவனங்களுக்கு நாங்கள் ஒரு வெளிப்படையான அழைப்பை  விடுக்
கிறோம்.’ என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் தெரிவித்த்ள்ளார்.