சாமி கும்பிட வந்த பெண் சாதி சொல்லி அனுமதி மறுப்பு! – தீட்சிதர்கள் மேல் வழக்குப்பதிவு!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் ஒருவர் சாதிய ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தீட்சிதர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் மிகவும் பிரபலமானது. இங்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் பழைய புவனகிரி சாலையை சேர்ந்த ஜெயசீலா என்பவர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்குள்ள கனகசபை மீது ஏறி அவர் தரிசனம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் கனகசபை மீது பக்தர்கள் ஏறக்கூடாது என ஜெயசீலாவை தடுத்த தீட்சிதர்கள் அவரை சாதிய ரீதியாக இகழ்ந்து பேசி வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெயசீலா அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 தீட்சிதர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.