திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2022 (07:05 IST)

கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அடுத்த வெற்றி!

pregnanadha
கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அடுத்த வெற்றி!
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உலக அளவிலான ‘ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட்’ இணைய வழி சதுரங்கப்போட்டியில் பங்கேற்று,  உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே நாட்டுவீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இளம்வயதிலேயே சாதனை புரிந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அடுத்த வெற்றி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
 
ரெய்காவிக் 2022ஆம் ஆண்டின் ஓபன் செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது