மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு மணி நேரத்தில் வந்த கல்லீரல்: அறுவை சிகிச்சை வெற்றி!
மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு மணி நேரத்தில் கல்லீரல் எடுத்துவரப்பட்டு அந்த கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 52 வயது நோயாளிக்கு கல்லீரல் பிரச்சனை இருந்தது. இதனை அடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது
இந்த நிலையில் மதுரையில் கிடைத்த கல்லீரலை ஒரு மணி நேரத்தில் விமானத்தில் எடுத்து வரப்பட்டு அந்த கல்லீரல் சென்னை விமான நிலையத்தில் இருந்து அரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வெற்றிகரமாக எடுத்து வரப்பட்டது
இதனையடுத்து உடனடியாக நோயாளிக்கு அந்த கல்லீரலை பொருத்தி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ததாகவும் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்றும் தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது