உத்தர பிரதேச தேர்தலில் பாஜக படுதோல்வி: சுயேட்சை வேட்பாளர் வெற்றி!
சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில் தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த மேலவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது ஆச்சரியத்தை அளித்துள்ளது
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மேலவை தேர்தலில் காசி தொகுதி பாஜக வேட்பாளர் சுதாமா படேல் என்பவர் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான அன்னபூர்ணா சிங் என்பவர் 4,134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்
இரண்டாவது இடத்தை சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் பெற்ற நிலையில் பாஜகவுக்கு 3வது இடமே கிடைத்தது என்பதும் அவருக்கு 170 வாக்குகள் மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாஜக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்