’பீஸ்ட்’ வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த சரத்குமார்
பீஸ்ட் திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என நடிகர் சரத்குமார் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் பீஸ்ட் வெற்றி பெற பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தம்பி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என தெரிவித்து உள்ளார்
விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது