1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (11:19 IST)

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய ரூபா குருநாத்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார் ரூபா குருநாத்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் கடந்த 2019 ஆம் ஆண்டு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போது அவர் அந்த பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவும், தொழிலில் கவனம் செலுத்துவதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் தான் தலைவராக இருந்த போது ஒத்துழைத்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.