தொடர்புடைய செய்திகள்
- முதலமைச்சரிடம் பொய் சொல்லி தப்பித்துக் கொள்வேன்… அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
- ’வஞ்சம் தீர்த்தாயடா’ – இயக்குனர் சுசி கணேசனின் அடுத்த படம்!
- இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 1,700 ஆக உயர்வு!
- 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா சோதனை! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
- புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்… எம் எல் ஏக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா சோதனை!
ஒமிக்ரான் பரவல்... தீவிர கண்காணிப்பில் சென்னை!!
கொரோனா விதிமுறைகளை மீறுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்திருந்த நிலையில் பாதிப்புகளும் குறைந்தன. இந்நிலையில் தற்போது டெல்டா, ஒமிக்ரான் இருவகை வேரியண்டுகளும் வேகமாக பரவி வருவதால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கடற்கரைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களில் கொரோனா மாதிரிகளை சேகரிக்கவும், விதிமுறைகளை மீறுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. மேலும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டாய முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
