தொடர்புடைய செய்திகள்
- ஒற்றை செங்கலை வைத்து ஏமாற்றிவிட்டார்கள்! – எய்ம்ஸ் குறித்து வானதி சீனிவாசன்!
- 8ம் வகுப்பு வரை பள்ளிகள் விடுமுறை; இல்லம் தேடி கல்வி! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
- ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி; வார்டுகளில் கண்காணிப்பு! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- அரசு வேறு; அரசியல் வேறு..! – பிரதமர் வருகை குறித்து கனிமொழி கருத்து!
- எந்த பிரச்சினையும் இல்லாமல் முடிந்த புத்தாண்டு! – மக்களுக்கு டிஜிபி நன்றி!
புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்… எம் எல் ஏக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா சோதனை!
தமிழகத்தில் நாளை மறுநாள் 2022 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடக்க உள்ளது.
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கலைவாணர் அரங்கில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மீண்டும் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும் என செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி உள்ளதால் கலைவாணர் அரங்கத்திலேயே சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ல எம் எல் ஏக்கள், செய்தி சேகரிக்க வரும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவை ஊழியர்கள் ஆகிய அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சான்றிதழோடு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில், தலைமை செயலகத்திலும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
