வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (10:55 IST)

ஆண்டின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

இந்த ஆண்டின் முதல் பங்குச்சந்தை வர்த்தக நாளில் பங்குச்சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
2022 ஆம் ஆண்டின் முதல் வர்த்தக நாளான இன்று காலை முதலே பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550 புள்ளிகள் உயர்ந்து 58,710 புள்ளிகள் என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 160 புள்ளிகள் உயர்ந்து 17,515 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ஆண்டின் முதல் நாளிலேயே பங்குச் சந்தை உயர்ந்திருப்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது