1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (11:24 IST)

சென்னையில் பரோட்டா சாப்பிட்ட மாணவர் மரணம்? – அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொரட்டூர் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் சிபி. இவர் நேற்று இரவு நேர சிற்றுண்டி உணவகம் ஒன்றில் இரவு உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்று படுத்துள்ளார். சில மணி நேரங்களில் அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் சிபி மூச்சுதிணறலால் உயிரிழந்துள்ளார். சிபி மரணத்திற்கு அவர் சாப்பிட்ட பரோட்டாவே காரணம் என அவரது உறவினர் குற்றம் சாட்டிய நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட பரோட்டாதான் காரணமா என்பது பிரேத பரிசோதனைக்கு பின்பே தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.