1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (10:50 IST)

அதிமுக தலைமை அலுவலகம் பெயர் மாற்றம்! – ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு!

அதிமுக கட்சி தனது பொன்விழாவை கொண்டாட உள்ள நிலையில் தலைமை அலுவலகத்தின் பெயர் மாற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு முக்கியமான அரசியல் கட்சியாக வளர்ந்துள்ளது அஇஅதிமுக. அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெறும் பொன்விழாவை கொண்டாட அதிமுகவினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவின் பொன்விழாவை பிரம்மாண்டமான மாநாடு நடத்தி கொண்டாட கட்சி தலைமை திட்டமிட்டு வருகிறது. மேலும் பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் சூட்ட திட்டமிட்டுள்ளதாக ஈபிஎஸ்- ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர்.