செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 24 ஜனவரி 2022 (09:45 IST)

தலைமை செயலக ஊழியர் திடீர் கைது: என்ன காரணம்?

சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவர் திடீரென கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூபாய் 14 லட்சம் மோசடி செய்ததாக தலைமைச் செயலக ஊழியர் நிக்சன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது 
 
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை செய்த நிலையில் நிக்சன் என்பவரை கைது செய்தனர்
 
சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில்  நிக்சனை ஆஜர்படுத்தப்பட்ட பின் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தாக கூறப்படுகிறது
 
சென்னை தலைமைச் செயலகத்தில் ஊழியர் ஒருவர் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது தலைமை செயலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது