புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (15:24 IST)

மாடியில் பதுங்கல்; சிசிடிவியால் சிக்கிய நைட்டி திருடன்! – கேரளாவில் பரபரப்பு சம்பவம்!

கேரளாவில் மொட்டை மாடியில் பதுங்கி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நைட்டி திருடன் பிடிபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் தலையோலப்பரம்பு பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மேத்யூ மற்றும் அவரது மனைவி ஆகியோர் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் மகள் சோனா திருமணமாகி பெரம்பலூரில் வசித்து வருகிறார்.

தனது தாய், தந்தையர் தனியாக வசித்து வருவதால் அந்த வீட்டில் சில இடங்களில் சோனா சிசிடிவி கேமிராக்களை பொருத்தி அவ்வபோது தன் செல்போனில் அங்கு நடப்பவற்றை பார்த்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அன்று வழக்கம்போல சிசிடிவி கேமராவை சோதித்தபோது மொட்டை மாடியில் நைட்டி அணிந்த திருடன் ஒருவன் பதுங்கியிருந்தது சோனாவை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

உடனடியாக காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இதுகுறித்து அவர் கூறியுள்ளார். உடனே கேரளா போலீஸார் மேத்யூ வீட்டிற்கு சென்று மொட்டைமாடியில் பதுங்கிய நைட்டி திருடனை பிடித்துள்ளனர். விசாரணை நைட்டி திருடன் பெயர் ராபின்சன் என்பதும், ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவன் என்பதும் தெரியவந்துள்ளது.