1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:02 IST)

புஷ்பா படத்தை பார்த்து இளைஞர் கொலை - 3 சிறுவர்கள் கைது!

அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தை பார்த்து இளைஞர் ஒருவரை 3 சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான ‘புஷ்பா’ திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லியில் ஜஹாங்கீர்புரி என்ற இடத்தில் அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தை பார்த்து இளைஞர் ஒருவரை 3 சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சம்பவத்தை அந்த சிறுவர்கள், தங்களது செல்ஃபோனில் வீடியோவும் எடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யவும் நினைத்துள்ளனர். இதன்மூலம் பிரபலம் அடையலாம் என்றும் எண்ணியுள்ளனர். அல்லு அர்ஜூன் அந்தப் படத்தில் பேசும் ‘நான் யாருக்கும் அடங்காதவன் டா’ என்ற அந்த டயலாக்கையும் இமிடேட் செய்து பேசியும் உள்ளனர். 
 
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் டி.சி.பி. உஷா ரங்நானி தலைமையிலான போலீசார், சிறுவர்களை கைது செய்துள்ளனர்.