1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சென்னை பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு தேதி அறிவிப்பு!

சென்னை பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு தேதி அறிவிப்பு!
சென்னை பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு தேதி அறிவிப்பு!
சென்னை பள்ளிகளுக்கு ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் பாடங்களை முடிப்பதில் தாமதம் ஆனது. இதனை அடுத்து தேர்வுகளும் தாமதமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 வழக்கமாக ஏப்ரல் மாதத்திற்குள் தேர்வு முடிவடைந்து விடும் நிலையில் இந்த ஆண்டு மே மாதம் வரை தேர்வு செல்கிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கும் என்றும் இந்த தேர்வுகள் மே 12ஆம் தேதி முடியும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது