திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (12:12 IST)

சென்னையில் வேன் மோதி சிறுவன் உயிரிழந்த விவகாரம்: பள்ளி முதல்வர் டிஸ்மிஸ்!

school boy
சென்னையில் வேன் மோதி சிறுவன் உயிரிழந்த விவகாரம்: பள்ளி முதல்வர் டிஸ்மிஸ்!
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி சிறுவன் மீது வேன் மோதியதால் உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளியின் முதல்வர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
சென்னை ஆழ்வார் திருநகரில் கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி தனியார் பள்ளி வளாகத்தில் வேன் மோதி தீக்‌ஷித் என்ற சிறுவன் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் தீக்ஷித் படித்த பள்ளியின் முதல்வர் உள்ளிட்ட 3 பேரை பள்ளி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்து நடவடிக்கை எடுத்து உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது