புதன், 17 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (11:35 IST)

பேருந்து படிக்கட்டில் தொங்கினால் இனி வழக்குப்பதிவு!

பேருந்து படிக்கட்டில் தொங்கினால் இனி வழக்குப்பதிவு!
சென்னையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது வரும் காலங்களில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து பேட்டியளித்த  சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சாலை விபத்துகளைத் தடுக்கவும், சாலைகளைப் பாதுகாப்பாக மாற்றவும் சென்னை போக்குவரத்து காவல்துறை “தோழன்” என்ற அமைப்புடன் இணைந்து 100 பள்ளிகளில் போக்குவரத்து விதிகள் குறித்த மெகா விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என அவர் கூறினார்.