1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:01 IST)

பேருந்து படிக்கட்டில் நின்றால் வழக்கு! – மாணவர்களுக்கு எச்சரிக்கை!

Bus
சென்னையில் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க அரசு பேருந்துகளில் இலவச பயணசீட்டை தமிழக அரசு அளித்து வருகிறது. இந்நிலையில் பேருந்துகளில் படிகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபட கூடாது என காவல்துறை எச்சரித்தாலும் இப்படியான பயணங்கள் தொடர்கின்றன.

சென்னையில் நேற்று மட்டும் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்ததாக 111 பள்ளி மாணவர்கள், 43 கல்லூரி மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதுகுறித்து எச்சரித்துள்ள சென்னை காவல்துறை, சென்னையில் பேருந்து படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது இனி வரும் காலங்களில் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளது.