1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai rowdy capture by gun shot

பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்.. சென்னையில் பரபரப்பு..!

சென்னை
சென்னை சேர்ந்த ரவுடியை போலீசார் சுற்றி வளைத்த போது போலீசாரை ரவுடி தாக்கியதாகவும் இதனை அடுத்து அந்த ரவுடியை போலீசார் சுட்டு பிடித்ததாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாப்பூர் ரவுடி சிவகுமார் கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரோகித் ராஜன் என்ற ரவுடி சென்னை டி.பி.சத்திரத்தில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர்.

இதனை அடுத்து ரவுடி ரோகித் ராஜன் போலீசாரை தாக்கியதில் இரண்டு போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து துப்பாக்கி சூடு நடத்தி ரோகித் ராஜனை போலீசார் பிடித்ததாகவும் தெரிகிறது.

துப்பாக்கி சூடு காரணமாக காயம் அடைந்த ரோஹித் ராஜன் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சுட்டுப் பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி ரோஹித் ராஜன் மதுரை பாலாவின் கூட்டாளி என்று அவரை பிடிக்க சென்றபோது ஆயுதங்களால் தாக்கியதால் வேறு வழியின்றி சுட்டுப் பிடித்ததாகவும் போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
About Writer
Siva