1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai reaches 7,000 corona positives cases

சென்னையில் எகிறும் கொரோனா +ve: மண்டல வாரியான விவரம் இதோ!!

சென்னை
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது.  
 
நேற்று தமிழகத்தில் 536 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது.  
 
மேலும் நேற்று கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களில் சென்னையில் மட்டும் 364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால்  சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,114 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை நிலவரத்தை மண்டல வாரியாக பார்க்கையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,272 ஆக உயர்வு, இதனையடுத்து கோடம்பாக்கத்தில் 1,077, திரு.வி.க நகரில் 835, தேனாம்பேட்டையில் 786, அண்ணா நகரில் 586 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
வலுவிழந்த அம்பன்: நாளை கரை கடக்கும் என தகவல்!