1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona virus crisis india wide

ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! – மீளுமா இந்தியா?

India
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்ட ஊரடங்கும் முடிவடைந்து நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,01,139 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 3,163 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 35,058 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,249 பேர் பலியான நிலையில் 8,437 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 11,760 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 11,745 பேரும், டெல்லியில் 10,054 பேரும், ராஜஸ்தானில் 5,507 பேரும், மத்திய பிரதேசத்தில் 5236 பேரும், உத்தர பிரதேசத்தில் 4,605 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
நீங்க மருந்து கண்டுபிடிக்கிறதுக்குள்ள கொரோனா அழிஞ்சிடும்! – ஹூ அமைப்பின் விஞ்ஞானி ட்வீட்!