1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai railway track damage for cyclone

கனமழையால் கீழே இறங்கிய தண்டவாளம்: சென்னையில் பரபரப்பு!

ரயில்வே தண்டவாளம்
கனமழையால் கீழே இறங்கிய தண்டவாளம்: சென்னையில் பரபரப்பு!
தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தமிழக அரசு மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையால் சோதனை மேல் சோதனை ஏற்பட்டு வருகிறது 
 
அந்த வகையில் தற்போது கனமழை காரணமாக சென்னை ரயில்வே தண்டவாளம் கீழே இறங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை பென்சில் ஃபேக்டரி அருகே ரயில்வே தண்டவாளம் திடீரென கீழே இறங்கி உள்ளதாக செய்திகள் வெளிவந்தது 
 
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ரயில்வே துறை அதிகாரிகள் வண்ணாரப்பேட்டை பென்சில் ஃபேக்டரி பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் அந்த பகுதியில்தான் ரயில்வே தண்டவாளம் கீழே இறங்கியதும் கண்டுபிடித்தனர்
 
இதனையடுத்து பாதிப்பை சரி செய்ய ரயில்வே அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்னும் சில நிமிடங்களில் கீழே இறங்கிய ரயில்வே தண்டவாளம் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
மீண்டும் மிதக்கும் சென்னை; 2020 எவ்ளோ சோதிக்குமோ? - ட்ரெண்டாகும் கலாய் மீம்கள்!